மதுபோதை + கூகுள் மேப் = கடலுக்குள் இறங்கிய கார்!
கடலூர் அருகே கடலுக்குள் காரை இறக்கியவர்கள் பற்றி...
சிதம்பரம்: மதுபோதையில் கூகுள் மேப்பை பின்பற்றி காரை இயக்கிய ஓட்டுநர், தவறுதலாக கடலுக்குள் காரை இறக்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூர் வழியாக காரில் பயணம் செய்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை சாலையில் வியாழக்கிழமை அதிகாலை கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பின்பற்றி பயணம் செய்துள்ளனர்.
கடலூர், சொத்திகுப்பம் பகுதி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது மதுபோதையில் கடற்கரை மணலில் காரை இறக்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
4 வீல் டிரைவ் கார் என்பதால், காரை மணலுக்குள் இறக்கி வேகமாக ஓட்டியுள்ளனர். மதுபோதையில் கார் கடலிலும் செல்லும் என நினைத்து, காரை திடீரென கடலுக்குள் ஓட்டியுள்ளனர்.
சிறிது தூரம் கடலுக்குள் சென்ற கார் திடீரென நின்றுவிட்டது. மதுபோதையில் கடலில் தத்தளித்தவர்களை அப்பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பின்னர், காவல்துறையினரின் உதவியுடன் டிராக்டர் மூலம் இவர்கள் பயணம் செய்த கார் கட்டி இழுக்கப்பட்டது. போர் வீல் டிரைவிங் காரினை கடலுக்குள் ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
A drunk driver accidentally drove his car into the ocean while following Google Maps.
இதையும் படிக்க : பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.