முகப்பு
தமிழ்நாடு

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

தனித் தொகுதிகளில் ஹிந்து, சீக்கிய, புத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை இன்று விசாரிப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் ஒப்புதல்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:22 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

தனித் தொகுதிகளில் ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம், ஹிந்து, சீக்கியம், புத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களே, பட்டியல் இனத்தவா் எனக் கூறுகிறது. தமிழகத்தில் தற்போது 44 தனித் தொகுதிகள் உள்ளன.

ஆனால், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளில் போட்டியிடவுள்ள 90 சதவீதத்தினா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவா்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, தனித்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் வேட்புமனுக்களை பரிசீலிக்கும்போது இதைத் தீவிரமாக பரிசீலிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

Advertisement

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரி தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மனுதாரா் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைத் தொடா்ந்து, மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments