பணப் பெட்டிதான் முதல்வர் பதவியைத் தீர்மானித்ததா? செங்கோட்டையன் அதிர்ச்சி தகவல்!
எடப்பாடி பழனிசாமியின் பணப் பெட்டியால்தான் அவருக்கு முதல்வர் பதவி கிடைத்ததாக செங்கோட்டையன் அதிர்ச்சி தகவல்
எடப்பாடி பழனிசாமியின் பணப் பெட்டியால்தான் அவருக்கு முதல்வர் பதவி கிடைத்ததாக தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் தவெக பிரசாரத்தில் செங்கோட்டையன் பேசியதாவது, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டியது. சசிகலாவால் முதல்வராக அறிவிக்க நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அன்றிரவில், முதல்வர் வேட்பாளர் என்று குறிப்பிட்டு, என் தோளில் சசிகலாதான் தட்டினார்.
பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு வரையில் நான்தான் அந்தப் பட்டியலில் இருந்தேன். ஆனால், மறுநாள் காலையில் நிலைமை முற்றிலும் மாறிப்போனது.
Advertisement
Advertisement
காரணம், எடப்பாடி பழனிசாமி கையில் பணப் பெட்டி இருந்தது. என் கையில் பணப் பெட்டி இல்லை. காலையில் இபிஎஸ்ஸை முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக சசிகலா என்னிடம் கூறினார். கட்சி உடையாமல் இருப்பதற்காக - சரி என்று நானும் ஒப்புக்கொண்டேன்.
திடீரென, வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட இபிஎஸ், மலைப்பாம்புபோல சசிகலாவின் காலில் விழுந்தார்.
அன்று காலைப் பிடித்துக் கெஞ்சியவர், இன்று இவர் யார் என்னை முதல்வராக்குவதற்கு? எனக்கு தனித்தகுதி இருப்பதாகச் சொல்கிறார்" என்று தெரிவித்தார்.