முகப்பு
தமிழ்நாடு

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:28 AM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:30 PM

சென்னை, ஏப். 18: மும்பை- சென்னை இடையே கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் வரும் ஜூன் 7- ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து ஏப். 19 -ஆம் தேதி முதல் ஜூன் 7 -ஆம் தேதி வரையில் அனைத்து நாள்களிலும் அதிகாலை 12.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01015) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

Advertisement

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஏப். 20 -ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 8 -ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01016) மறுநாள் வரும் 21 மற்றும் ஜூன் 9 -ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மும்பை சிஎஸ்டி நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், ரேணிகுண்டா உள்ளிட்ட 24 நிலையங்களில் நின்று செல்லும்.