தாம்பரம் - சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரயில்கள்
சென்னை தாம்பரத்திலிருந்து மேற்கு வங்கத்திலுள்ள சந்திரகாச்சி நிலையத்துக்கு வரும் 26 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள்
சென்னை தாம்பரத்திலிருந்து மேற்கு வங்கத்திலுள்ள சந்திரகாச்சி நிலையத்துக்கு வரும் 26 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை தாம்பரத்திலிருந்து வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 2 ஆம் தேதி காலை 10.15 மணிக்குப் புறப்படும் சிறப்புவிரைவு ரயில்கள் (எண் 06075) மறுநாள் (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சி நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கத்தில் வரும் 27- ஆம் தேதி மற்றும் ஜூன் 3 ஆகிய நாள்களில் (புதன்கிழமைகள்) சந்திரகாச்சி நிலையத்திலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06076) மூன்றாவது நாள் (வெள்ளிக்கிழமை) மே 29 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரம் நிலையத்தை வந்தடையும்.
Advertisement
Advertisement
நிற்கும் நிலையங்கள்: ரயில்கள் சென்னை எழும்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கல், விஜயவாடா உள்ளிட்ட 15 நிலையங்களில் நின்று செல்லும். ரயில்களுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மே 22) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.