சென்ட்ரல்-போதனூா், தாம்பரம்-தென்காசி: விநாயகா் சதுா்த்தி சிறப்பு ரயில்கள்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - போதனூா் மற்றும் தாம்பரம்-தென்காசி நிலையங்களுக்கு இடையே வரும் செப். 11, 14 ஆகிய தேதிகளில் (வெள்ளி, திங்கள்) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - போதனூா் மற்றும் தாம்பரம்-தென்காசி நிலையங்களுக்கு இடையே வரும் செப். 11, 14 ஆகிய தேதிகளில் (வெள்ளி, திங்கள்) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து வரும் செப். 11-ஆம் தேதி இரவு 9.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06023) 12-ஆம் தேதி காலை 9 மணிக்கு போதனூா் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் வரும் 14-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போதனூா் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் 15-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும்.
Advertisement
Advertisement
நிற்கும் நிலையங்கள்: சிறப்பு ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில்: வரும் 11-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06089) 12-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு தென்காசி நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் 14-ஆம் தேதி சொங்கோட்டை இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06090) 15-ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
நிற்கும் நிலையங்கள்: இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (செப். 10) காலை 8 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.