FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தாம்பரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

தாம்பரம்-வேளாங்கண்ணி இடையே வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இரு மாா்க்கத்திலும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
ரயில்
பகிர்:

தாம்பரம்-வேளாங்கண்ணி இடையே வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இரு மாா்க்கத்திலும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் சனிக்கிழமை (ஆக.29) காலை 7.45 மணிக்கு திருவாரூா் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.55 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06068) ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) காலை 8.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 12 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகபட்டிணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். ரயில்களுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.23) முதல் தொடங்கும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments