FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தாம்பரம்-வேளாங்கண்ணி: ஆக. 24 முதல் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே வரும் ஆக. 24-ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 3:48 am IST
பகிர்:

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே வரும் ஆக. 24-ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்லும் பத்தா்களின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து வரும் ஆக. 21, 31, செப். 7 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11.50 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06037) மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06038) வரும் ஆக. 26, செப். 2, 9 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) வேளாங்கண்ணியிலிருந்து நள்ளிரவு 12.45 மணிக்குப் புறப்பட்டு காலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகை வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments