தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன தவெக விஜய் பற்றி..
மார்ச் 15ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தும் அதிக பிரசாரங்களை ரத்து செய்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
கடலூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டங்கள் இதுவரை மூன்று முறை அனுமதி பெற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல பிரசாரக் கூட்டங்களுக்கு, தவெகவினர் பெரும் முயற்சி எடுத்து காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்ற நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக சனிக்கிழமை என்றாலே பிரசாரங்களுக்குச் செல்வதில் விஜய்க்கு ஏதோ ஒரு தயக்கம். தவெகவினர் இது பற்றி கூறுகையில், கரூர் நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, விஜய் தான் பங்கேற்கும் பிரசாரங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார்கள்.
Advertisement
ஆனால், ஒவ்வொரு பிரசாரமும் ரத்தாகும்போது, ஊடகங்கள், தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ரத்த செய்தியை வெளியிடுகின்றனவே தவிர அது பற்றி அதிகாரப்பூர்வ செய்திகளோ, ரத்து செய்யப்படுவது ஏன் என்பது குறித்த காரணங்களோ வெளியிடப்படுவதில்லை. ஒருவேளை அதெல்லாம் அவர் தனிப்பட்ட தகவல் என்றும் பதிலளிக்கலாம்.
TVK leader Vijay is the most absentee in the election campaign!