உதயநிதியை முதல்வராக்க விரும்புகிறார் மு.க. ஸ்டாலின்: அமித் ஷா
திமுகவின் வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு
திமுகவின் வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பாஜக தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "எங்கள் அரசு திமுகவின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
மு.க. ஸ்டாலின், தனது மகனை (உதயநிதி ஸ்டாலின்) முதல்வராக்க விரும்புகிறார். முதலில் கருணாநிதி, பின்னர் ஸ்டாலின், இப்போது அவரது மகன். இந்த வாரிசு அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
Advertisement
Advertisement
காங்கிரஸும் திமுகவும் பெண்களை நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுத்தனர். மேலும், தமிழகத்துக்கான தொகுதி அதிகரிப்பையும் அவர்கள் நிராகரித்து விட்டனர்.
இருப்பினும், தமிழ்நாட்டுக்கும் நாட்டின் பெண்களுக்கும் நீதி வழங்குவோம் என்றும், காங்கிரஸ் - திமுகவின் திட்டத்தை முறியடிப்போம் என்று மோடி சார்பாக உறுதியளிக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். தமிழகத்தில் நாங்கள் சட்டம் - ஒழுங்கு நிலையை மேம்படுத்துவோம். பிரதமர் மோடியின் தலைமையில், தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுப்போம்" என்று தெரிவித்தார்.