தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு முதல்வரும் திமுக தலைவரமான மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "என்னுயிர் மக்களே! நம்முடைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நீங்கள் எழுதப்போகும் நாள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களுக்குத் தெரியும். எது உண்மை? எது பொய்? எது நடிப்பு? எது உழைப்பு? யார் நரி? யார் சிங்கம்? அடிமைத்தனம் எது? தைரியம் எது? அனைத்துமே உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. என்னை நம்பி இந்த நாட்டை ஆள என்னிடம் கொடுத்தீர்கள். ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ துறைகளில், தமிழ்நாட்டை முதலிடத்திற்கு நாம் ஒன்றாகக் கொண்டு வந்திருக்கிறோம். நாம் வீழ்த்திய எதிரிகளின் சதிகளை எண்ண ஆரம்பித்தால், அதற்குள்ளாக தேர்தல் முடிவே வந்துவிடும். நம்முடைய திட்டங்களை, அதனால் விளைந்த நன்மைகளை நான் பட்டியலிட ஆரம்பித்தால், அடுத்த தேர்தலே வந்துவிடும்.
Advertisement
Advertisement
எனக்கு நீங்கள் கொடுத்த கடமையை என்னால் முடிந்த வரைக்கும் சரிவரச் செய்துவிட்டேன். உங்களுடைய கடமையை நீங்களும் சரிவரச் செய்ய வேண்டும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதுவரை யாரும் காணாத ஒரு பெரிய கனவோடு காத்திருக்கிறேன். இனி நம்முடைய போட்டி தில்லியுடன் மட்டும் இருக்காது. தெற்கு ஆசியாவில் அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவேன். மண், மொழி, மானம் மூன்றையும் காப்பாற்ற மூச்சு இருக்கும் வரைக்கும் போராடுவேன்.
வாக்களிப்பீர், உதயசூரியன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு!
தமிழ்நாடு வாக்களிக்கும்! தமிழ்நாடு வெல்லும்!
என்றும் உங்களில் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!"
என்று குறிப்பிட்டுள்ளார்.
The day that will write the future of Tamil Nadu: Chief Minister MK Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.