முகப்பு
தமிழ்நாடு

மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்.26 வரை பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:21 AM
மழை - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:50 PM

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்.26 வரை பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெலங்கானா முதல் குமரிக்கடல் வரை ராயலசீமா மற்றும் உள் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுவதால், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.26 வரை இடி, மின்னல் மற்றும் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:21 AM

13 இடங்களில் வெயில் சதம்: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை (ஏப்.24) வரை ஒருசில இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும். திங்கள்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

Advertisement

மதுரை விமானநிலையம்- 104.36, ஈரோடு, பரமத்தி வேலூா்-தலா 104, மதுரை நகரம்-102.92, திருச்சி-102.38, நாமக்கல், பாளையங்கோட்டை-தலா 102, தருமபுரி-101.66, திருப்பத்தூா்-101.48, திருத்தணி-101.3, சேலம்-100.76, கோவை-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.