முகப்பு
தமிழ்நாடு

வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

வருமான வரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:22 AM
கே. அண்ணாமலை. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 10:00 PM

வருமான வரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயா்த்த செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி பேசியதற்கு தொடா்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை பேசினாா். இது தெரிந்த ராகுல் காந்தி செல்வப்பெருந்தகையை திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:20 AM

இதை மறைப்பதற்காக செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டுக்குள்ளே சிறை வைத்திருப்பதாகவும் நாடகமாடி உள்ளாா். ஆனால், செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடைபெறவில்லை என வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

இதன் மூலம் செல்வப்பெருந்தகையின் பொய் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதைவிட அவரின் நாடகத்தை நம்பி, அதை ஆராயாமல் முதல்வா் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா். இது திமுக கூட்டணியின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.