வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட ஆதாரங்களை இன்று வெளியிடுகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை இன்று வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்பான இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை செய்ததாகவும், ராகுல் காந்தியின் பிரசாரத்தில் தன்னைப் பங்கேற்க விடாமல் தடுக்கவே இந்தச் சோதனை என்றும் வருமான வரித் துறை மீது அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், செல்வப்பெருந்தகையின் வீட்டில் எந்தச் சோதனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறிய வருமான வரித் துறையினர், செல்வப்பெருந்தகையின் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதை நிரூபிக்கும்வகையில், முழு ஆதாரங்களையும் இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
Income Tax Department Raid: Congress Leader Selvaprerunthagai to release evidence today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.