முகப்பு
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி...

Updated On : 25 ஏப்ரல் 2026, 3:34 am IST
எஸ்.பி. வேலுமணி
பகிர்:

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவையைச் சோ்ந்த வாக்காளா் விக்னேஷ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கடந்த 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்களுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளது.

தற்போது வேலுமணியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடா்பான ஆவணங்களை அவா் தனது வேட்புமனுவில் கூறவில்லை. குறிப்பாக, வேலுமணியின் முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் மறைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

எனவே, வேலுமணியின் வருமானம், சொத்து விவரங்கள் மற்றும் முதலிடுகள் குறித்து தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.