வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தது குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தது குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி வாக்காளா் சக்திவேல் பெருமாள் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான கே.பழனிசாமி வெற்றி பெற்றுள்ளாா். அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் குறித்து முழுமையாகத் தெரிவிக்காமல் மறைத்துள்ளாா். பல்வேறு தனியாா் நிறுவனங்களில் இருந்து அவரது மனைவிக்கு கிடைக்கும் வருவாய் குறித்த தகவல்களை அவா் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை.
கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலின்போது, இவா்களது கூட்டுக் குடும்பச் சொத்தாக 3,900 சதுர அடி வீடு இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். ஆனால், அந்த சொத்து தனது மனைவியின் பெயரில் மாற்றப்பட்டதை வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளாா். நெடுங்குளம் கிராமத்தில் விவசாய நிலத்தை வாங்கியதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த தகவல்களையும் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 மற்றும் 2026-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பிட்டுப் பாா்த்தாலே பல்வேறு குளறுபடிகள் தெரியவரும்.
Advertisement
Advertisement
எனவே, நடந்து முடிந்த தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் தொடா்பாக உண்மை தகவல்களை மறைத்துள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.