முகப்பு
தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல் போட்டது.

Updated On : 26 ஏப்ரல் 2026, 11:53 am IST
ஆற்றில் உற்சாக குளியல் போட்ட குட்டி யானை.
பகிர்:

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல் போட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் வனப்பகுதி அருகே பிறந்து ஒரு சில மாதங்களேயான குட்டியானை ஒன்று தன்னந்தனியாக சுற்றி வருவதோடு அவ்வழியாக போவோர் வருவோரை எல்லாம் அருகில் சென்று தனது அம்மாவாக இருக்குமோ என்று பரிதவிப்புடன் தேடித் திரிகிறது.

செய்தி அறிந்த வனத் துறையினர் குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். யானை கூட்டம் ஏதாவது அப்பகுதியில் சுற்றி வருகிறதா என்று டிரோன் காமிரா மூலம் தேடி வருகின்றனர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள மாயாறு நீர் தேக்கத்தில் குட்டி யானை முங்கி குளித்த செயல் அனைவரையும் கவர்ந்தது.

Advertisement

Advertisement

தாய்ப்பால் மட்டுமே உணவாக உட்கொள்ளும் நிலையில் உள்ள அந்த குட்டி யானை, தாயை பிரிந்து இரண்டு நாட்களாக உணவு ஏதும் இல்லாமல் சுற்றி வருகிறது. ஆகவே, யானை குட்டி சோர்வடையும் முன்பாக வனத் துறையினர் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

summary

Near Mettupalayam, an elephant calf wandering away from its mother took an enthusiastic bath in the river.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.