கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!
கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.
கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வந்தாா். முதல்வா் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா்.
இந்த நிலையல் 2ஆவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனோரஞ்சிதம் நீர்த்தேக்கத்தில் திங்கள்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
நடைப்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த முதல்வருடன் பொதுமக்கள் கலந்துரையாடியதோடு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து சிறுமி வணக்கம் தெரிவித்தார்.
அதனைப் பெற்றுக்கொண்ட அவர் கைகுலுக்கி மகிழ்ந்தார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Chief Minister M K Stalin on Monday interacted with people and tourists at Kodaikanal regarding the prospects of DMK in the just concluded Assembly polls.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.