இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு! - தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு...
பொருளாதார வளர்ச்சி மூலமாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்கத்தில் 10.83 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலமான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ. 31.19 லட்சம் கோடியில் இருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.35.29 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில்,
"தொடர்ந்து 2வது நிதி ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது நம் தமிழ்நாடு!
எந்தத் தடையையும் தகர்த்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக நிலைநிறுத்திவரும் நம் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற தொலைநோக்குப் பார்வைக் கொண்ட தலைவனின் கனவுகளும் உழைப்புமே இதற்கு மூல முதற்காரணம்.
தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் சரியான திட்டமிடல் என அனைத்துத் துறைகளிலும் முதல்வர் காட்டி வரும் அக்கறையே, இன்று நம் மாநிலத்தை இந்தச் சிகரத்தில் ஏற்றி வைத்துள்ளது. வளர்ச்சி நாயகன் தலைமையில் திராவிட மாடல் 2.0-வில் தமிழ்நாடு இன்னும் பல சாதனைகளைப் புரியும்!" என்று பதிவிட்டுள்ளார்.