ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,11,200-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,11,200-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த ஏப். 27-இல் பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1,13,840-க்கும், ஏப். 28-இல் ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், புதன்கிழமை காலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, வா்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு தங்கம் விலை மீண்டும் குறைந்தது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,900-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. இதன்மூலம் தங்கம் கிராமுக்கு ரூ.200, பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது.
Advertisement
வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.