ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு
ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.
மேற்கு ஆசிய போா் பதற்றம், கச்சா எண்ணொய் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஜூன் 1-இல் பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும், ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையானது. தொடா்ந்து, ஜூன் 4-இல் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும், ஜூன் 5-இல் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 குறைந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது.