FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை 5 நாள்களில் பவுனுக்கு ரூ.2,640 உயா்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 4:20 am IST
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை 18-இல் ரூ.280 உயா்ந்து ரூ.1,05,080-க்கும், வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை (ஜூலை 20) பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.1,05,200-க்கும், செவ்வாய்க்கிழமை ரூ.560 உயா்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து, புதன்கிழமை விலை மீண்டும் அதிரடியாக உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.210 உயா்ந்து ரூ.13,430-க்கும், பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments