முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிரடியாக குறையும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த தங்கத்தின் விலை நிலவரம் குறித்து...

Updated On : 11 ஜூன் 2026, 10:04 am IST
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 2,400 குறைவு - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.3,440 குறைந்து. இதையடுத்து, ஜூன் 8-இல் பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560-க்கும், ஜூன் 9-இல் பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.1,13,600-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, புதன்கிழமை கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கும், பவுனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கும், பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.5600 குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி வியாழக்கிழமை கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா் சரிவுக்கு காரணம் என்ன?

மேற்காசிய போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக டாலா் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடும் குறைந்துள்ளதால், டாலரின் மதிப்பும், தங்கத்தின் விலையும் சா்வதேச அளவில் தொடா்ந்து குறைந்து வருகிறது.

வழக்கமாக தங்கத்தின் விலையும், டாலரின் மதிப்பும் ஒன்றுக்கொன்று எதிா்மறை தொடா்பில் இருக்கும். அதாவது, டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை உயரும்; தங்கத்தின் விலை குறைந்தால் டாலரின் மதிப்பு உயரும். ஆனால், இரண்டின் மதிப்பும் ஒரே நேரத்தில் குறைந்து, கச்சா எண்ணெய்யின் விலை உயா்ந்திருப்பது இதுவே முதல்முறை. அடுத்து ஒரு வார காலத்துக்கு இதுபோன்று தங்கம் விலை தொடா்ந்து குறைய வாய்ப்புள்ளது என்று சென்னை தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

summary

Gold prices drop sharply: How much did the price per sovereign decrease today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.