FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் (அக். 20)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

20 அக்டோபர் 2026, 10:13 am IST
தங்கம் விலை குறைவு - படம்: IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.

தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த அக்.12-இல் சவரன் ரூ. 1,280 குறைந்து ரூ.1,11,040-க்கும், அக்.13-இல் சவரன் ரூ. 280 குறைந்து ரூ. 1,09,480-க்கும், அக்.14-இல் ரூ. 760 குறைந்து ரூ.1,08,7200-க்கும் விற்பனையானது.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 75 குறைந்து ரூ.13,515-க்கும், சவரனுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1,08,120-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 13,535-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 1,08,280-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 32 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,570-க்கும் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ரூ. 1,08,560-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ. 1,07,920-க்கும் கிராமுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 13,490-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.

summary

The price of gold jewellery in Chennai today (Oct. 20) has decreased by Rs. 640 per sovereign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments