சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
சித்ரா பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளது குறித்து..
சித்ரா பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 5 மணிநேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தரிசனம் மற்றும் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பறை, வெய்யில் தாக்கத்தின் காரணமாக தர்பூசணி, வாழைப்பழம் போன்ற பழங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
சித்ரா பெளர்ணமி, இரவு 9:57 மணிக்கு தொடங்கி நாளை மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.07 மணிக்கு நிறைவடைய உள்ளதாக அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, அதிகாரிகள் விரிவான போக்குவரத்துத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வேயும் தமிழகப் போக்குவரத்துத் துறையும் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளன.
சித்ரா பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை என 4200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Chitra Pournami: 5-Hour Wait for Darshan at Tiruvannamalai!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.