எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள்! 2000 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிப்பு!
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து தமிழ்-பிராமி, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்ட 30 கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடான எகிப்துக்கும் இடையிலான பண்டைய வர்த்தக தொடர்புகளுக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
6 கல்லறைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியிலும் உள்ளதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எகிப்துக்கு, அதன் பண்டைய தலைநகரான தீபஸுக்குள் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்குக்கு கி.பி 1 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மசாலாப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களை வர்த்தகம் செய்வதற்காகச் சென்றதாகக் குறிக்கிறது.
தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை ஏற்பாடு செய்த தமிழ் கல்வெட்டு குறித்த சர்வதேச மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்சின் பாரிஸில் உள்ள பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டனர்.
‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.
ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது.
Indian visitors seem to have followed an existing practice of leaving their names inside the tombs, researchers say
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.