FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

எகிப்துடன் டிரா செய்த பெல்ஜியம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஃபிஃபா தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியம் 1-1 கோல் கணக்கில், 29-ஆம் இடத்திலிருக்கும் எகிப்துடன் டிரா செய்தது.

Updated On : 17 ஜூன் 2026, 4:51 am IST
பகிர்:

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஃபிஃபா தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியம் 1-1 கோல் கணக்கில், 29-ஆம் இடத்திலிருக்கும் எகிப்துடன் டிரா செய்தது.

இந்த ஆட்டத்தில் 7-ஆவது நிமிஷத்தில் பெல்ஜிய வீரர் கெவின் டி புருயினின் கோல் முயற்சி வைடாக சென்று வீணானது. பெல்ஜியத்துக்கான அதிர்ச்சியாக, முதலில் எகிப்து அணியே கோல் அடித்தது. 19-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் இமாம் அஷுர் தனது முதல் சர்வதேச கோலை பதிவு செய்தார்.

முதல் பாதி முழுவதுமாகவே ஆக்ரோஷமாக விளையாடிய எகிப்து அணி, முன்னிலையுடன் அதை நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் 53-ஆவது நிமிஷத்தில் கெவின் டி புருயினின் மற்றொரு கோல் முயற்சியும் வீணானது.

Advertisement

Advertisement

எகிப்து தனது முதல் உலகக் கோப்பை வெற்றியை நோக்கி முன்னேறியதாகத் தெரிந்தது. ஆனால் அது 66-ஆவது நிமிஷம் வரையே நீடித்தது. அப்போது சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கிய பெல்ஜிய வீரர் ரொமேலு லுகாகுவுக்கு, அந்நாட்டு ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகமளிக்க, அந்த நிமிஷத்திலேயே கோல் அடித்தார் அவர். எகிப்தின் முகமது ஹேனி அதை தடுக்க முயல, அது "ஓன் கோல்'-ஆக மாறியது.

இதனால் உற்சாகமடைந்த பெல்ஜிய அணியினர் அடுத்த கோல் வாய்ப்புக்கு முயல, எகிப்து இடம் தரவில்லை. ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. எகிப்துக்காக கோலடித்த இமாம் அஷுர் ஆட்டநாயகன் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments