16 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்..! பெல்ஜியம் போராடி தோல்வி!
கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் வென்ற ஸ்பெயின் அணி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக ஸ்பெயின் முன்னேறியுள்ளது.
முன்னதாக மொராக்கோ அணியஒ 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த இரண்டு அணிகள்தான் முதல் அரையிறுதியில் மோதவிருக்கிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் திடலில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு பெல்ஜியம் - ஸ்பெயின் அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதின.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் ஃபேபியன் ரூயிஸ் 30ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பெல்ஜியம் அணியின் சார்லஸ் டி கெட்டலேரே 41ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.
பின்னர், இரண்டாம் பாதியில் மைக்கல் மெரினோ 88ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து ஸ்பெயினை 2-1 என வெற்றி பெற செய்தார்.
கடைசியாக ஸ்பெயின் அணி 2010ல் உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதுதான் அந்த அணி கடைசியாக அரையிறுதிக்கு முன்னேறியிருந்த உலகக் கோப்பையாக இருந்தது. தற்போது, 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் மொத்தமாக 17 ஷாட்டுகளை அடித்தது. அதில் 8 முறை இலக்கை நோக்கி அடித்தது. பெல்ஜியம் கோல்கீப்பர் திபோ குர்துவா சிறப்பாக செயல்பட்டு தடுத்தார். அவர் காயம் காரணமாக 71ஆவது நிமிஷத்தில் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை அளித்தது.
இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக முதல் கோல் அடித்த அணியாக பெல்ஜியமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
Spain advances to the semi-finals after 16 years! Belgium puts up a fight but loses!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.