நேஷன்ஸ் லீக்: தவறிழைத்த இங்கிலாந்துக்கு பாடம் புகட்டிய ஸ்பெயின்!
ஐரோப்பியாவின் நேஷன்ஸ் லீக் போட்டியில் இங்கிலாந்தை வென்ற ஸ்பெயின் குறித்து...
ஐரோப்பியாவின் நேஷன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியன் ஸ்பெயின் வென்றது.
கிளப் போட்டிகளுக்கு இடைவெளி விடுக்கப்பட்டு தேசிய அணிகளுக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பியாவின் மிகப்பெரிய கோப்பையான நேஷன்ஸ் லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன.
இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் லண்டனில் இருக்கும் விம்ளே திடலில் ஸ்பெயினுடன் மோதியது. இந்தப் போட்டியில் 2ஆவது நிமிஷத்தில் ஸ்பெயினின் லமின் யமால் கோல் அடித்தார்.
Advertisement
Advertisement
இங்கிலாந்து அணி 36ஆவது நிமிஷத்தில் ஜோர்டான் கோல் அடிக்க, 40ஆவது நிமிஷத்தில் ஹாரி கேன் மற்றுமொரு கோல் (குகரேலா ஓன் கோல்) அடித்து 2-1 என முதல் பாதி முடிவில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த ஸ்பெயின் அணி 60, 74ஆவது நிமிஷங்களில் முறையே அலெக்ஸ் பீனா, மைக்கேல் ஓயர்ஜபால் கோல் அடித்து 3-2 என முன்னிலைப் பெற்றது.
ஹாரி கேனுக்கு 54ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக மாற்றவில்லை. இந்தத் தவறினால் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. மேலும் தடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி மோசமாக விளையாடியது.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 52 சதவிகித நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இங்கிலாந்து அணி வீரர்களில் மூவருக்கு மஞ்சள் கார்டுகள் அளிக்கப்பட்டன.
Oyarzabal earns Spain Nations League win as England pay for Kane penalty miss
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.