FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிப். 21 - 26 திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றி...

14 பிப்ரவரி 2026, 2:49 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

பிப் 21, 23, 25 தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் பிரசாரம் செய்யவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்

Advertisement

Advertisement

பிப். 21 ஆம் தேதி திருவள்ளூரில் ஆவடி, அம்பத்தூர், பிப். 22 ஆம் தேதி மாதவரம், பொன்னேரி, பிப். 25ல் மதுரவாயல், பூந்தமல்லி மற்றும் பிப். 26ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பயணத்தின்போது. சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

summary

Edappadi palanisamy tour in Tiruvallur and Chengalpattu districts from Feb. 21 to 26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments