தவெகவுக்கு அதிமுக ஆதரவா? இபிஎஸ்ஸுடன் ஆனந்த் சந்திப்பு!
எடப்பாடி பழனிசாமி - என். ஆனந்த் சந்திப்பு பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்காக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டதாகவும், மறுபுறம் தவெக நிர்வாகி செங்கோட்டையன் மூலம் அதிமுகவிடம் ஆதரவு கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
காங்கிரஸ் கட்சித் தலைமை தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்திருப்பதாகவும், இன்று காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு அளிக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி வருவதாக இன்று காலைமுதல் தகவல்கள் வெளியாகின.
இதனால் காங்கிரஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், முக்கியத் திருப்பமாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இபிஎஸ் வீட்டுக்கு நேரில் வந்து அவருடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
AIADMK Support for TVK? Anand Meets EPS!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.