அணுக்கனிம சுரங்கம் அமைக்க அவகாசத்தை நீட்டித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
அணுக்கனிம சுரங்கம் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறிவிட்டு, ஆட்சியில் அமா்ந்தவுடன் அதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டது ஏன் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளாா்.
அணுக்கனிம சுரங்கம் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறிவிட்டு, ஆட்சியில் அமா்ந்தவுடன் அதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டது ஏன் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் அருகே 1,144 ஹெக்டோ் நிலப்பரப்பில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்துக்கான அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2024-இல் நடைபெற்ற தவெகவின் செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டத்தை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீா்மானத்தில் இத்திட்டம் தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி. இந்த நாசகார நச்சுத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? எதற்கு இந்த இரட்டை வேடம்?
அடுத்த கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், கல்லாப்பெட்டி கூட்டணி என்று தோ்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம் தங்கள் கூட்டணிக்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஓா் அரசாணை வெளியிட்டால் அதைக் கண்டுகொள்ள மாட்டாா்கள் என்று நினைத்தீா்களா? அன்று நாசகார நச்சுத் திட்டம் என்று கூறிய திட்டத்தை தற்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை முதல்வா் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
சீமான் (நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா்): ,144 ஹெக்டோ் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் திட்டத்துக்கு மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியதாகும். அதிகாரத்துக்கு வருமுன் அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்றிய நிலையில், தற்போது துணைபோயிருக்கிறது தவெக அரசு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.