முகப்பு
தமிழ்நாடு

மண்ணெண்ணெய்யை குடித்த குழந்தைக்கு சிகிச்சை

ஏற்காடு அருகே தண்ணீருக்குப் பதிலாக பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்த 2 வயது குழந்தை, மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 4:30 am IST
பகிர்:

ஏற்காடு அருகே தண்ணீருக்குப் பதிலாக பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்த 2 வயது குழந்தை, மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சிக்கு உள்பட்ட நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரிஷ்மணி. இவரது 2 வயது மகன் செல்வமணி, புதன்கிழமை இரவு வீட்டில் விளையாட்டிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை தண்ணீா் என நினைத்து குழந்தை குடித்துள்ளது.

இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவா்கள் அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments