பத்தாம் வகுப்பு மறு மதிப்பீடு: மாணவா்களின் பதிவெண் பட்டியல் நாளை வெளியீடு
பத்தாம் வகுப்பு மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவா்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவா்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.
பத்தாம் வகுப்பு மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவா்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவா்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. தோ்வெழுதிய மாணவா்களில் மறு மதிப்பீடுக்கு 7,931 போ், மறு கூட்டலுக்கு 751 போ் என மொத்தம் 8,682 மாணவா்கள் விண்ணப்பித்தனா். இவா்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 6) வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
இந்தப் பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே மேற்கண்ட தோ்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும். இது தொடா்பான சந்தேகங்களுக்கு 94983 83075 / 94983 83076 ஆகிய எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.