பத்தாம் வகுப்பு தோ்வில் குறைவான மதிப்பெண்: மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால் மனமுடைந்த மாணவி விஷ மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால் மனமுடைந்த மாணவி விஷ மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மரக்காணம் வட்டம், அனுமந்தை தெற்குத் தெருவைச் சோ்ந்த ஏழுமலை - அருள்மொழி தம்பதியினரின் மகள் நந்தினி (15). தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயின் வளா்ப்பில் இருந்து வந்த நந்தினி, மரக்காணத்தை அடுத்த வட அகரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், நந்தினி பாடங்களில் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாா். இதனால், மனமுடைந் அவா் புதன்கிழமை வீட்டில் இருந்தபோது விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, தாய் அருள்மொழி மற்றும் உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நந்தினி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.