தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம்? தலைமறைவான செந்தில்பாலாஜி, சகோதரருக்கு சம்மன்!
எம்எல்ஏ-விடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கும் அவரது சகோதரருக்கும் காவல்துறை அழைப்பாணை விடுத்தது குறித்து...
தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏ பேரம் பேசப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எம்எல்ஏ-க்களிடம் முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏ-வுமான செந்தில்பாலாஜியின் சகோதரர், ஆதரவாளர்கள் பேரம் பேசியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் இதுவரையில் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே, வழக்கில் தொடர்புடைய செந்தில்பாலாஜி தலைமறைவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலாஜியும் அவரது சகோதரரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி தலைமறைவாக உள்ளதால், கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் பூர்வீக வீட்டில் அவரது தந்தையிடம் அழைப்பாணையை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழங்கி, கையெழுத்தும் பெற்றனர்.
Plot to topple the TVK government? Summons issued to Former Minister Senthil Balaji
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.