தலைமைச் செயலகமா? அல்லது தவெக அலுவலகமா? வானதி சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
தலைமைச் செயலகம் தவெகவின் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு பற்றி...
தலைமைச் செயலகம் தவெகவின் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களுடன் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பேசியதாவது, "தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், மற்ற கட்சிகளில் உள்ளவர்களை ராஜிநாமா செய்யவைத்து, அவர்களின் கட்சிக்குள் கொண்டு வருகிறார்கள்.
தூய்மையான ஆட்சியைக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு, மறைமுகமான பேரத்திலும் வேறு விதங்களில் அழுத்தங்கள் வாயிலாகவும் மற்ற கட்சிகளின் எம்எல்ஏ-க்களை ராஜிநாமா செய்யவைத்து, இவர்களுக்கு பெரும்பான்மை கிடைப்பதற்காக ஒரு பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
Advertisement
Advertisement
மக்களிடம் ஆதரவு பெற்றுக்கொண்டுதான் ஆட்சியமைத்தனர். ஆனால், தன்னுடைய அரசுக்குப் பெரும்பான்மை கிடைப்பதற்காகக் குறுக்கு வழியில் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என இவ்வளவு குறுகிய காலத்தில் பண பேரம், அதிகார பேரம் செய்கின்றனர்.
தலைமைச் செயலகம் அரசுப் பணிக்கான இடமாக இல்லாமல், கட்சி அலுவலகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அமைச்சரின் தந்தை ஆய்வு செய்கிறார், புதிய பேருந்து வழித்தடங்களை கட்சி நிர்வாகிகள் தொடக்கி வைக்கிறார்கள், மாநகராட்சிக் கூட்டங்களில் தவெக நிர்வாகிகள் இருக்கின்றனர்.
எந்த இடத்திலுமே மக்கள் பிரதிநிதிகள் அல்லாத, அரசு அதிகாரிகள் இல்லாத நபர்கள் யாரும் அரசு விஷயங்களில் தலையிடக் கூடாது.
இந்த விஷயத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் தெளிவான நடைமுறைகளைக் கூறி, கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த அரசிலும் சட்டம் - ஒழுங்கில் எந்த மாற்றமும் கிடையாது. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை கொண்டுவரப்பட்டது. அதில் வெறும் சீருடை மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்தவித முன்னேற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.
BJP leader Vanathi Srinivasan alleges that the Secretariat has been converted into the TVK party office
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.