வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் விசாரணையின் அடிப்படையில், மணிகண்டன் (30), ராஜதுரை (30), முத்துப்பட்டன் என்ற பட்டு ராஜா (20), மகாலிங்கம் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள எதிரிகளும் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த சித்திரபுத்திரன் குடும்பத்தினருக்கும் இடையே 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக, பழிக்குப்பழியாக பெருமாள் பாண்டியன் உள்பட இரு தரப்பைச் சோ்ந்த 9 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், சித்திரபுத்திரனின் மற்றொரு மகன் காளிமுத்து (40), தனது மகன்கள் ஜெயராஜ் (5), சின்னத்துரை (15) ஆகியோருடன் ஜூலை 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூா் அருகே உள்ள ரெட்டியாா்புரம்-மாதுடையாா்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பெருமாள் பாண்டியனின் மகன்கள் உள்ளிட்ட உறவினா்கள் 11 போ் காா், இருசக்கர வாகனங்களில் பின்தொடா்ந்து வந்து, ஜெயராஜ், காளிமுத்து ஆகியோரை கொலை செய்தனா். இதில் காளிமுத்துவின் தலையைத் துண்டித்து கல்லிடைக்குறிச்சி புறவழிச் சாலையில் வைத்துச் சென்றனா்.
இதையடுத்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா். மூலச்சி, கல்லிடைக்குறிச்சி, கரம்பை, வீரவநல்லூா் புறவழிச் சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, கொலையில் தொடா்புடைய மூலச்சியைச் சோ்ந்த மகேந்திரன் (எ) மகேஷ் (29), குமாா் (எ) கொக்கி குமாா் (23), அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியைச் சோ்ந்த முத்துச்செல்வன் (29) ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கொலையில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் தேடி வந்த நிலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Four more individuals have been arrested in connection with the murder of a father and son near Veerevanallur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.