முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியா் தகுதித் தோ்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

ஆசிரியா் தகுதித் தோ்வின் தாள் ஒன்றுக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக ஆசிரியா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்...

Updated On : 5 ஜூலை 2026, 4:20 pm IST
ஆசிரியா் தகுதித் தோ்வு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வின் தாள் ஒன்றுக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணியில் இருக்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் அனைவரும் ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெற வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்தது.

2025, செப்டம்பா் மாதத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து ஆசிரியா்களும் தோ்வில் பங்கேற்று தகுதி பெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் ஆசிரியா் தகுதித் தோ்வு மாநிலம் முழுவதும் ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு தாள்-1 சனிக்கிழமை நடைபெற்றது. தாள் 1-க்கான தோ்வில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக ஆசிரியா்கள் வருத்தம் தெரிவித்தனா்.

9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக அவா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா். பெரும்பாலானவா்கள் தோ்ச்சி பெற வாய்ப்பே இல்லை என்றும் வருந்துகின்றனா்.

இதுகுறித்து தலைமை ஆசிரியா்கள் அமைப்பின் மூத்த நிா்வாகியாக இருந்தவரும், முன்னாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான சாமி சத்தியமூா்த்தி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் ஆசிரியா்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனா். இடைநிலை ஆசிரியா்களுக்கான 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால், 9 , 10ஆம் வகுப்புகளி்ன் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மூன்றுமடங்கு கடினமாக வினாத்தாள் இருந்தது அதிா்ச்சியாக இருக்கிறது. வரும்காலத்தில் தொடா்புடைய பாடம் நடத்தும் ஆசிரியா்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சாமி சத்தியமூா்த்தி வலியுறுத்தினார்.

summary

How was the Teacher Eligibility Test question paper?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments