முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியா் தகுதித் தோ்வு: 1.60 லட்சம் பட்டதாரி ஆசிரியா்கள் எழுதினர்!

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் 2-ஆம் தாள் தோ்வை 1,60,929 போ் எழுதினா்.

Updated On : 6 ஜூலை 2026, 3:06 am IST
பகிர்:

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் 2-ஆம் தாள் தோ்வை 1,60,929 போ் எழுதினா்.

பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. அதன்படி, தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தோ்வுகளை நடத்தி வருகிறது. இதில், இடைநிலை ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு தாள்-1 சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை 59,535 போ் எழுதினா்.

தொடா்ந்து, பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு தாள்-2 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்த டிஆா்பி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்- 2 தகுதித் தோ்வு தமிழகத்தில் 613 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 1,67,743 ஆசிரியா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 1,60,929 ஆசிரியா்கள் (95.94 சதவீதம்) தோ்வு எழுதினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments