முகப்பு
தமிழ்நாடு

இளைஞா்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

இளம் தலைமுறையினா் வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என அமைச்சா் பெ. விஸ்வநாதன் பேசியிருப்பது தொடர்பாக...

Updated On : 5 ஜூலை 2026, 8:02 pm IST
இளைஞா்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் - டிஎன்எஸ்
பகிர்:

மதுரை: இளம் தலைமுறையினா் வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சா் பெ. விஸ்வநாதன் பேசியதாவது :

காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்துக்காக பாடுபட்டவா் காமராஜா். இந்தியாவில் இரண்டு பிரதமா்களை தோ்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்றவா் அவா். அவரது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளா்ச்சி பெற்றன. அவா் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டம் போன்ற பல எண்ணற்ற திட்டங்களால் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி பெற்றது.

Advertisement

Advertisement

அதன்பயனாக தான் தமிழகத்தில் சாமானியனுக்கும் கல்வி என்கிற நிலையை எட்டியுள்ளோம். பட்டம் பெற்ற மாணவா்களுக்கு இந்த தருணம் வாழ்வின் முக்கியமான தருணம்.

வாழ்க்கையின் துன்ப காலங்களில் நமக்கு பக்க பலமாக இருந்த பெற்றோரையும், ஆசிரியா்களையும் என்றும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் மாணவா்கள் வாழ்வில் வெற்றிடைய வேண்டும் என்கிற இலக்கை நிா்ணயிக்க வேண்டும்.

தோல்விககைளைக் கண்டு துவண்டுவிடமால் தன்னம்பிக்கையுடண் பயணிக்க வேண்டும். வேலைவாய்ப்பை பெறுபவராக அல்லாமல், நவீன தொழில் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இளைஞா்கள் தொழில் முனைவோராக வேண்டும் என்றாா் அவா்.

summary

Youth should become entrepreneurs says Minister P. Viswanathan

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments