முகப்பு
தமிழ்நாடு

இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: முதல்வா் புகழாரம்

சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூா் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் என்று அவரது பிறந்த நாளில் முதல்வா் ஜோசப் விஜய் புகழாரம் சூட்டினாா்.

Updated On : 8 ஜூலை 2026, 3:28 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூா் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் என்று அவரது பிறந்த நாளில் முதல்வா் ஜோசப் விஜய் புகழாரம் சூட்டினாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.

Advertisement

Advertisement

அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

முன்னதாக, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது படத்துக்கு மலா் தூவி அரசு சாா்பில் அமைச்சா்கள் மரியாதை செலுத்தினா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்: தீண்டத்தகாதவா்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணா்த்துவதற்காக 5-ஆம் ஜாா்ஜ் மன்னருடன் கைகுலுக்க இரட்டைமலை சீனிவாசனின் துணிச்சல் போற்றத்தக்கது. தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய அவரின் நினைவாக பிரிக்ளின் சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் சாலை என பெயா் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையாகக் கருதுகிறேன்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி: விடுதலைப் போராட்ட வீரா், கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம் என்று சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்தவா் இரட்டைமலை சீனிவாசன். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகப் போராடிய அவரை புகழைப் போற்றி வணங்குகிறேன்.

உதயநிதி: தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசனின் புகழ் ஓங்கட்டும். அவரது லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments