முகப்பு
தமிழ்நாடு

சமூகநீதியின் முன்னோடி, ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இரட்டைமலை சீனிவாசன்! முதல்வர் விஜய் புகழாரம்

விடுதலை போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் விஜய் புகழாரம்...

Updated On : 7 ஜூலை 2026, 11:28 am IST
சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை - X
பகிர்:

சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என அவரது பிறந்தநாளில் முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

விடுதலை போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, வெங்கடரமணன், மரியவில்சன், வன்னி அரசு, குமார் ஆகியோரும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

"சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.

அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Rettaimalai Srinivasan was a pioneer of social justice: Chief Minister Vijay X post for tribute to him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments