முகப்பு
தமிழ்நாடு

கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார்

கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுப்பதாக அமைச்சர் குற்றம்சாட்டியது பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 10:51 am IST
முதல்வர் ஜோசப் விஜய் (கரூர் பரப்புரையின்போது) - கோப்புப்படம்
பகிர்:

கரூர் செல்லவிடாமல் முதல்வர் ஜோசப் விஜய்யை திமுக இன்றுவரை தடுத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கரூர் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க தவெகவினருக்கு தடை விதிக்க வேண்டும், முதல்வர் விஜய் சாட்சியங்களை சந்திக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இதுதொடர்பான கேள்வி பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

”முதல்வரான பிறகும் கரூர் செல்லவிடாமல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் திமுக செய்கிறது. அப்படியானால், முதல்வராக இல்லாதபோது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு மாதம் காத்திருந்து முடியாததால்தான் சென்னையில் சந்தித்தோம்.

முதல்வர் விஜய்யின் ஸ்டைலே திடீரென்று இரவில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு வருவார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, புதுக்கோட்டை காவல் மரணம் விவகாரத்திலும் அப்படிதான் செய்தார். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல்வரின் வீடு, அலுவலகத்தை திமுகவினர் தொடர்ந்து கண்காணித்தனர்.

தற்போது முதல்வரான பிறகும், கரூர் செல்கிறார் என்ற தகவல் வெளியானவுடன் மனு அளித்து அவரை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்தையும் தாண்டி மக்களை முதல்வர் விஜய் சந்திப்பார்.

கரூர் துயரம் என்பது தவெகவின் வாழ்நாள் துயரம். பலியான 41 பேரின் குடும்பத்துக்கும் துணையாக இருப்போம். காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியைக் கொடுக்கவிடாமல் திமுக நீதிமன்றம் மூலம் தடுத்து வைத்துள்ளது.” என்றார்.

summary

DMK is preventing Vijay from going to Karur! Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments