முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்
முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதில்...
முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்,
"யாரைப் பார்த்தும் எங்களுக்குப் பயமில்லை. எவ்வளவோ மிரட்டிய திமுகவைப் பார்த்தே எங்களது முதல்வர் பயப்படவில்லை. இதெல்லாம் யாருக்கும் பெரிய விஷயம் எல்லாம் கிடையாது. 7, 8 ஆண்டுகளாக சிலர் அவர்களது சொந்த விளம்பரத்திற்காக அவர்களுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? அச்சு ஊடகம்தான் இருந்தது. ஊடக அறிக்கை மட்டும் வழங்கப்படும். எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும். மக்களை வழக்கமாக சந்திக்கிறார் எங்களது முதல்வர். மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பு என்பது கட்டாயம் இல்லை . செய்தியாளர்களைச் சந்தித்தால்தான் அரசை நடத்த வேண்டும் என்றில்லை. மக்களுக்குத் தேவையானதை அவர் தெளிவுபடுத்துவார். அரசு சார்பாக, கட்சி சார்பாக நாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
Advertisement
Advertisement
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதையே தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதில் மதவாத சக்திகள் நுழைந்து அரசியல் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்றார்.
There is no compulsion for the Chief Minister to meet the press: CTR Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.