FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பரந்தூர் விமான நிலையப் பணிகள் மீண்டும் தொடக்கமா? நிர்மல் குமார் விளக்கம்

பரந்தூர் விமான நிலையப் பணிகள் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து...

அமைச்சர் நிர்மல் குமார் - எக்ஸ்
பகிர்:

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூலை 7) தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

''பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் விஜய் கூடுதல் கவனம் செலுத்துகிறார். சில அதிகாரிகளுடன் பேசியபோது பரந்தூரில் ஓடுபாதை அமைக்க முடியாது எனக் கூறினர்.

Advertisement

Advertisement

விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் இடத்தில் 800 - 900 நீர்நிலைகள் இருப்பதே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு ஓடி ஒளிவது பெரிய விஷயமில்லை. சம்மன் அளித்தால் ஆஜராவதில் என்ன பிரச்னை. குற்றத்தில் ஈடுபாடு கொண்டதால்தான் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

எங்களுக்கு வந்த சம்மன்களுக்கு நாங்கள் ஆஜராகவில்லையா? தில்லியில் இருந்து சம்மன் மூலம் அழைத்தபோதெல்லாம் ஆஜரானோம். அவர்களுக்கு ஆஜராவதில் என்ன பிரச்னை.

மின்சாரத் துறையை சீரமைக்க வேண்டியுள்ளது. அந்த பணிகள் முடிந்த பிறகு மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் யாரும் பணியில் நியமிக்கப்படவில்லை. நேர்மையான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனம் நடைபெற்றுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

summary

Will work on the Parandur airport resume? Nirmal Kumar clarifies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments