ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் மாற்றம்! அரசாணை வெளியீடு!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் 'சமூக நீதித்துறை' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் வகையில், தமிழ்நாடு அரசின் விதிகளில் திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகங்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் துறையின் திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் நல திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகளை அறிய https://www.tnadw.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.
A Government Order has been issued regarding the renaming of the Adi Dravidar and Tribal Welfare Department.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.