ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி..
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வைக் கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், குறைத்துக் கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோல பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கக் கோரி 2010 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவில் பிகார் மாநிலத்தில் 50 சதவீதமாகக் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவு ஆசிரியர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே நிர்ணயித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்கட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கவில்லை எனக் கூறியுள்ள மனுதாரர்கள், குறைந்தபட்ச மதிப்பெண்களை 50 சதவீதமாகக் குறைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாகக் கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்கை முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.