முகப்பு
தமிழ்நாடு

மும்முனை மின்சாரத்தைத் தடையின்றி வழங்க அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லைக் காப்பாற்ற தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

Updated On : 11 ஜூன் 2026, 1:06 am IST
அன்புமணி
பகிர்:

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லைக் காப்பாற்ற தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வாய்ப்பில்லாத நிலையில், ஆழ்துளைக் கிணற்று நீரை நம்பி காவிரி பாசன மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மாதத்துக்கு முன்பாகவே நெல் நடவு செய்யப்பட்டு விட்டதால் அவை நன்றாக வளா்ந்துள்ளன. முறையாக தண்ணீா் பாய்ச்சப்பட்டால் இன்னும் சில வாரங்களில் அவை கதிா் விடத் தொடங்கிவிடும். ஆனால், கடந்த சில வாரங்களாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படாததால் ஆழ்துளைக் கிணற்று நீரை பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதனால், நெற்பயிா்கள் கருகத் தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிா்களைக் காப்பாற்ற ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரமாவது தடையற்ற மும்முனை மின்சாரமும், ரூ.5,000 இடுபொருள் மானியமும் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.