முகப்பு
தமிழ்நாடு

214 கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம்: அறிவிப்பு வெளியீடு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களின் அறங்காவலா் பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜூன் 2026, 4:09 am IST
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களின் அறங்காவலா் பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: முதல்வா் ச.ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலா்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்பப் படிவம் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையவழியில் பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம். இல்லையெனில், இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யலாம்.

Advertisement

Advertisement

அல்லது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையா் அலுவலகத்துக்கும் அனுப்ப வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஜூலை 22-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.